சீர்மரபினர் நலத்திட்ட உதவி பெற சிறப்பு முகாம்

சிவகங்கை: மாவட்டத்தில் சீர்மரபினர் நலத்திட்ட உதவிகளை பெற இன்று முதல் மே 7 வரை மானாமதுரை, சிங்கம்புணரி, இளையான்குடியில் சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்ட உதவி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை மற்றும் மூக்கு கண்ணாடி செலவு தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை பெற வயது 18 முதல் 60க்குள் இருத்தல் வேண்டும்.

ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர், பதிவை புதுப்பித்தல், விடுபட்டவர்கள் மீண்டும் பதியவும், புதிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவி மனுக்களை பெறுதல் என இளையான்குடி வட்டத்திற்கு உட்பட்ட குமாரகுறிச்சி, பெரும்பச்சேரி, கீழாய்குடி, கண்ணன்தேவன்புலி, நகரக்குடி, திருவுடையார்புரம் கிராம மக்களுக்கு இன்று (ஏப்.,29) குமாரகுறிச்சி சமுதாயக்கூடத்தில் சிறப்பு முகாம் நடைபெறும்.

ஏப்.,30 அன்று மேலத்துறையூர், கண்ணமங்கலம், உத்தமனுார், நாகமுகுந்தன்குடி, திருவள்ளூர் கிராமங்களுக்கு தாயமங்கலம் சமுதாயக்கூடம், மானாமதுரை வட்டத்தில் சங்கமங்கலம், கீழப்பசலை, கிளங்காட்டூர், மிளகனுார், மானாமதுரை நகர் மக்களுக்கு ஏப்., 29, 30 ஆகிய தினங்களில் மானாமதுரை சீனியப்பா மகாலிலும், மே 5ம் தேதி சிங்கம்புணரி வட்டத்தில் வலைசை பட்டி, கரிசல்பட்டி, புழுதிபட்டி, பிரான்பட்டி, முசுண்டபட்டி, திருமலைக்குடி கிராமங்களுக்கு புழுதிப்பட்டி சமுதாயக்கூடம்.

ஏப்., 6 அன்று உலகம்பட்டி, கிழவயல், சடையன்பட்டி, குரும்பளூர், வாராப்பூர், மேலக்கண்ணாரிருப்பு, மிண்ணமலைபட்டி, கட்டுக்குடிபட்டி கிராமங்களுக்கு புதுார் சமுதாயக்கூடத்திலும், மே 7ம் தேதி சடையன்பட்டி, வேட்டையன்பட்டி, அரநத்தம் குண்டு, முறையூர், கோவில்பட்டி, எஸ்.எஸ், கோட்டை, சூரக்குடி, கண்ணமங்கலபட்டி, நாட்டார்மங்கலம் கிராமங்களுக்கு சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் முகாம் நடைபெறும்.

இம்முகாம்களில் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.

Advertisement