அனல்மின் நிலையத்தில் வி.சி., கட்சி முற்றுகை

மந்தாரக்குப்பம்; ஊத்தங்கால் தனியார் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி வி.சி., கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மந்தாரக்குப்பம் அடுத்த ஊத்தங்கால் தனியார் அனல் மின் நிலையத்தில் (டாக்கா) ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமனோர் பணிபுரிகின்றனர்.

இதில், 87 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி நேற்று தனியார் அனல்மின் நிலையம் முன்பு வி.சி., மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

மந்தாரக்குப்பம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அனல் மின் நிலைய அதிாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement