தனிநபர் கட்டடத்திற்கு வரி சலுகை சின்னாளபட்டி கூட்டத்தில் புகார்
சின்னாளபட்டி: வரி செலுத்தாத தனிநபர் கட்டடத்திற்கு சலுகை காட்டும் பாரபட்சம் உள்ளதாக சின்னாளபட்டி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார் எழுப்பினார்.
சின்னாளபட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் பிரதீபா(தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆனந்தி (தி.மு.க.,) முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர்கள் விவாதம் :
ராஜாத்தி (தி.மு.க.,): திட்டப் பணிகளுக்கு கவுன்சிலில் தீர்மானங்கள் மட்டுமே வாசிக்கின்றனர். பணி துவக்கம், பணி விவரம் குறித்த எந்தவித தகவலும் இல்லை.
ராஜசேகர் (தி.மு.க.,): அஜன்டாவில் மட்டுமே பணிகளை பட்டியலிடுகின்றனர். கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலோ, கேள்வி எழுப்பினாலோ பதவி பறிபோகும் என பயமுறுத்துகின்றனர்.
ஹேமா (தி.மு.க.,): மூடப்பட்ட தினசரி மார்க்கெட் கடைகளை இடித்து அகற்றுவதில் தாமதம் நீடிப்பது ஏன்? திருவிழா நடக்க உள்ளதால் மாற்று நடவடிக்கை தேவை.
தலைவர்: பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தீர்ப்புக்கு பின் கட்டட அகற்றல் பணி நடக்கும்.
ஹேமா (தி.மு.க.,): பேரூராட்சிக்கு வரி செலுத்தாத தனிநபர் கட்டடத்திற்கு சலுகை காட்டும் பாரபட்சம் ஏன்?
தலைவர்: அப்போதைய பேரூராட்சி நிர்வாகம் வரி விலக்கு அளித்திருக்கலாம்.
ஹேமா (தி.மு.க.,): தற்போது வரை அதனை ஏன் ஆய்வு செய்யவில்லை. நிலுவை வரியை வசூலிக்க நடவடிக்கை தேவை.
ஜெயகிருஷ்ணன் (சுயே.,): பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி குறித்து எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லை.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவீன கட்டடங்களை அகற்றிவிட்டு மாற்று இடங்களில் கழிப்பறை கட்டுவதன் மூலம் பல புதிய பிரச்னைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்பணியை முறைப்படுத்த நடவடிக்கை தேவை.
துாய்மை காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
ஏரி, அணைகளில் வரையறையின்றி மண் அள்ளுவது தடுக்கப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை தேவை
-
குறைகேட்பு கூட்டம் 432 மனுக்கள் குவிந்தன
-
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
-
தர்பூசணியில் செயற்கை நிறமிகள் இல்லை; தோட்டக்கலை துறையினர் தகவல்
-
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு; ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு இந்தியா 'குட்டு'
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது