தேர்தல் நேர கெடுபிடியை தவிர்க்க தி.மு.க., - அ.தி.மு.க., 'புது யுக்தி'

பொதுத்தேர்தல் என்றாலும், இடைத்தேர்தல் என்றாலும் ஓட்டு போடுபவர்களுக்கு பரிசு பொருளை கொடுத்தே ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு அரசியல் கட்சிகள் வந்து விட்டன. அதே போன்று வாக்காளர்களும் தங்களுக்கு பரிசு பொருட்கள் ஏதேனும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தேர்தல் வந்தால் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி, எதிர் கட்சியினரின் கண்காணிப்பை மீறி பரிசு பொருட்களை தங்களின் ஆதரவாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.
எனவே, பரிசு பொருட்களை கொடுப்பதை இப்போதே துவங்கி, நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் கொடுப்பவர்கள் இல்லை; எப்போதும் கொடுப்பவர்கள் என காட்டி கொள்வதில் அரசியல் கட்சிகள் போட்டி போட துவங்கி விட்டன. இதற்காக புதுப்புது யுக்திகளை கையாளுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் சட்டசபை தொகுதியில், வரும் சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் சண்முகம் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் இந்த தொகுதி வி.ஐ.பி., அந்தந்தை பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மயிலம் தொகுதியில் ஒன்றிய கவுன்சிலர் பகுதியிலும் ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை நடந்த விழாக்களில் அந்தந்த கவுன்சிலர் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் இருந்து பெண்களை வரவழைக்கின்றனர். அவர்களுக்கு நலத்திட்டமாக தையல் இயந்திரம், காஸ் அடுப்பு, ஹாட்பாக்ஸ், சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களும், இளைஞர்களுக்கு கிரிக்கெட் தொகுப்பு என ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 3 முதல் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அ.தி.மு.க.,வின் இந்த அதிரடியால் ஆளும் கட்சியான தி.மு.க.,விலும் இப்போது மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கு முன் வரை ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் என்றால் அன்னதானம் அல்லது பிரட் வழங்கி வந்தனர். சமீப காலமாக இந்த பாணியை மாற்றியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தின் முடிவில் வேட்டி, சேலை மற்றும் பரிசு பொருட்களை வழங்க துவங்கியுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வின் போட்டியை சமாளிக்க பரிசு பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்!
-
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்; மாநில அரசு நடவடிக்கை
-
மதுரை சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் துவக்கம்
-
கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு!
-
ராட்சச குடிநீர் குழாயிலிருந்து வீணாகும் தண்ணீர்!
-
தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ; விசாரணையில் அம்பலம்!