தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ; விசாரணையில் அம்பலம்!

புதுடில்லி: பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் அம்பலமானது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில், மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ என்பது தெரியவந்துள்ளது.
பயங்கரவாதி ஹாசிம் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்.எஸ்.ஜி.,யை சேர்ந்தவன். ஹாசிம் மூஸாவை லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் உளவு அமைப்பினருக்கு உள்ளது.
இவன் காஷ்மீரில் நடந்த 3 பயங்கரவாத தாக்குதல்களில் பங்கேற்றுள்ளான்.
பஹல்காம் தாக்குதல் விசாரணையில், மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் உறுதியானது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும், காஷ்மீரில் நடந்த முந்தைய பயங்கரவாத தாக்குதலுக்கு ஹாஷிம் மூசா பங்கு அதிகம் என மூத்த அதிகாரி தெரிவித்தார்.










மேலும்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை
-
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்