பெலகாவி, விஜயபுராவுக்கு கோடை சிறப்பு ரயில்கள்

பெங்களூரு: 'கோடை நெரிசலை தவிர்க்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

ரயில் எண் 06551: விஸ்வேஸ்வரய்யா முனையம் - பெலகாவி சிறப்பு ரயில், விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் இருந்து ஏப்ரல் 30, மே 2ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு முறையே, மே 1, 3 ஆகிய தேதிகளில் காலை 7:30 மணிக்கு பெலகாவி சென்றடையும்

எண் 06552: பெலகாவி - விஸ்வேஸ்வரய்யா முனையம் சிறப்பு ரயில், பெலகாவியில் இருந்து மே 1, 3ம் தேதிகளில் மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, முறையே மே 2, 4 ஆகிய தேதிகளில் அதிகாலை 4:30 மணிக்கு பெங்களூரு வந்தடையும்

எண் 06561: யஷ்வந்த்பூர் - விஜயபுரா சிறப்பு ரயில், யஷ்வந்த்பூரில் இருந்து ஏப்., 30ம் தேதி இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மறுநாள் மதியம் 2:30 மணிக்கு சென்றடையும்

எண் 06562: விஜயபுரா - யஷ்வந்த்பூர் சிறப்பு ரயில், விஜயபுராவில் இருந்து மே 1ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:15 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்

நீட்டிப்பு



எண் 07323: எஸ்.எஸ்.எஸ்.ஹூப்பள்ளியிலிருந்து சனிக்கிழமை தோறும் உத்தர பிரதேசம் பனாரஸ் புறப்படும் சிறப்பு ரயில், ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

எண் 07324: பனாரசில் இருந்து செவ்வாய் தோறும் எஸ்.எஸ்.எஸ்.ஹூப்பள்ளி புறப்படும் சிறப்பு ரயில் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

எண் 07327: பெலகாவியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் உத்தர பிரதேசம் மாயு புறப்படும் சிறப்பு ரயில், ஜூன் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எண் 07328: மாயுவில் இருந்து புதன்கிழமை தோறும் பெலகாவி புறப்படும் சிறப்பு ரயில், ஜூலை 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement