'என்கவுன்டரில்' பலியான ரிதேஷ் உடலை புதைக்க ஐகோர்ட் அனுமதி
பெங்களூரு: ஹூப்பள்ளியில் பலாத்காரம் செய்து ஐந்து வயது சிறுமியை கொன்று போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரிதேஷ் குமாரின் உடலை புதைக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஹூப்பள்ளி நகரின், தாரிஹாளா நகரில் வசித்த ஐந்து வயது சிறுமி, ஏப்ரல் 13ம் தேதியன்று வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்தாள். இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பீஹாரைச் சேர்ந்த ரிதேஷ் குமார், 35, என்பவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்.
ரிதேஷ் குமாரின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள போலீசாரால் முடியவில்லை. எனவே, போலீசாரே ரிதேஷ் குமாரின் உடலை எரிக்க திட்டமிட்டனர். இந்த வழக்குக்கு இவரது உடலே முக்கிய சாட்சியாகும்.
எனவே அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என, பி.யு.சி.எல்., என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுத் தாக்கல் செய்தது.
இம்மனு மீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் அடங்கிய அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசி கிரண், 'உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஏப்ரல் 15ம் தேதி, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் உறுப்பு மாதிரிகள் சேகரித்து, பதப்படுத்தப்பட்டன.
அவரது உடலின் பெரும் பகுதி அழுகியுள்ளது. இதை புதைக்க வேண்டும். வரும் நாட்களில் அவசியம் ஏற்பட்டால், உடலை தோண்டி எடுக்கலாம். உடல் மேலும் அழுகுவதை தடுக்க பதப்படுத்தி புதைக்க வேண்டும்' என வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உடலை புதைக்க அனுமதி அளித்தனர்.
சம்பவத்துக்கு பின், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான எப்.ஐ.ஆர்., மற்றும் என்கவுன்டர் தொடர்பான எப்.ஐ.ஆரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தாக்கல் செய்ய வேண்டும். என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டு, வழக்கை மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு