கிரைம் கார்னர்
* தொழிற் சாலையில் தீ
கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவின் தொழிற் பகுதியில் சவுத் பீல்டு பெயின்ட்ஸ் லிமிடெட் என்ற தொழிற்சாலை உள்ளது. நேற்று காலை தொழிற்சாலையில் தீப்பிடித்ததில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், உபகரணங்கள் தீக்கிரையாகின. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
* ரியல் எஸ்டேட் அதிபர் பலி
பெங்களூரின், ராச்சேனஹள்ளியில் வசித்த கிரண்குமார், 36, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர் நேற்று அதிகாலை, எலஹங்காவின், பி.பி., சர்வீஸ் சாலையில் ஸ்கூட்டரில் செல்லும் போது, வேகமாக வந்த டெம்போ டிராவலர் மோதியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
* இடி தாக்கி 2 பேர் பலி
விஜயநகரா, ஹகரிபொம்மனஹள்ளியின், தெலகி கிராமத்தில் வசித்த சென்னகிரி ஹாலேஷப்பா, 48, நேற்று மாலை வயலில் ஆடு மேய்தது கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இடி தாக்கி அவர் உயிரிழந்தார். ராய்ச்சூர், சிரவாராவின், கே.குடதின்னி கிராமத்தின் சாயண்ணா யாதவ், 55, நேற்று முன்தினம் தன் வயலில் இருந்த போது, இடி தாக்கி உயிரிழந்தார்.
* வாகன திருடர்கள் கைது
பெங்களூரின், மஹாதேவபுரா, ஒயிட் பீல்டு உட்பட, பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட வருண் குமார், 30, முகமது, 30, ஆகியோரை மஹாதேவபுரா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் மீட்கப்பட்டன.
* மனைவியை கொன்றவருக்கு 'ஆயுள்'
துமகூரு, பாவகடாவின், வெங்கடாபுரா கிராமத்தில் வசிப்பவர் பாலாஜி, 32. இவர் 2023 மார்ச் 23ம் தேதி, தன் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற வழக்கில் கைதானார். போலீசார் மதுகிரியின் 4வது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவரது குற்றம் உறுதியானதால், ஆயுள் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
***
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு