ஹஜ் யாத்திரிகர்களுக்கு தடுப்பூசி முகாம்

கோவை:
ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கு, தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.

இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும், சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு. புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் பயணிகள் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று முகாம் நடந்தது.

ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு, தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

கோவை மாவட்டத்தில் இருந்து செல்லும் ஹஜ் யாத்ரீகர்களில், 138 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இன்று, 137 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement