காஷ்மீரில் பலியானவர் மனைவியிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
மத்திகெரெ: பஹல்காம் தாக்குதலில் பலியான பெங்களூரை சேர்ந்த பாரத் மனைவியிடம், மத்திகெரெயில் உள்ள சுந்தர்நகரில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடந்த 22ம் தேதி, காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மனைவி, குழந்தையுடன் சுற்றுலா சென்றிருந்த பாரத் சுட்டு கொல்லப்பட்டார். இவர், பெங்களூரு, மத்திகெரே சுந்தர் நகரை சேர்ந்தவர்.
சம்பவம் குறித்து விசாரிக்க, நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் பெங்களூரு வந்தனர். மத்திகெரெயில் உள்ள பாரத் இல்லத்திற்கு சென்று, அவரது மனைவி சுஜாதாவிடம் விசாரணை நடத்தினர்.
பஹல்காமில் எத்தனை மணி நேரம் இருந்தீர்கள்; தாக்குதலுக்கு முன்பு பயங்கரவாதிகள் என்ன கூறினர்; அவர்களின் முகம் ஞாபகம் உள்ளதா; சில புகைப்படங்களை காண்பித்து அடையாளம் தெரிகிறதா என கேள்விகள் கேட்கப்பட்டதகவும், அதற்கு அவர் மனைவி கூறியதாக வெளியான தகவல்கள் விபரம்:
நானும், என் கணவர், 3 வயது குழந்தையுடன் ஏப்., 18ம் தேதி காஷ்மீருக்கு சுற்றுலா சென்றோம். ஏப்., 22ம் தேதி பஹல்காமை அடைந்தோம். அங்கிருந்து பைசரன் பகுதிக்கு குதிரையில் சென்றோம். சிறிய கூடாரத்தில் தங்கினோம்.
தாக்குதல் நடந்த அன்று மதியம் 1:30 மணிக்கு திடீரென பட்டாசு வெடிப்பது போல் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்ட சில நிமிடத்தில், கையில் பெரிய துப்பாக்கியுடன் பயங்கரவாதிகள் வந்தனர். இதை பார்த்த நானும், என் கணவரும், குழந்தையும் கூடாரத்திற்கு பின் ஒளிந்து கொண்டோம்.
அப்போது, எங்கள் அருகே வந்த பயங்கரவாதி, 'எங்கள் குழந்தைகள் இரக்கமின்றி கொலை செய்யப்படுகின்றனர். நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருப்பீர்களா' என கேட்டு, என் கணவர் தலையில் சுட்டார். இதில், அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு