மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்பு

சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ், நேற்று பதவியேற்றார்.
செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவர்கள் வசம் இருந்த துறைகள், மற்ற அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன.
புதிதாக அமைச்சரவையில், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ் சேர்க்கப்பட்டார். புதிய அமைச்சர் பதவியேற்பு விழா, நேற்று மாலை 6:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் நடந்தது.
கவர்னர் ரவி, அவருக்கு பதவிப்பிராமணம் செய்து வைத்தார். விழாவில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கவர்னருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்ற பின், முதல்வர் ஸ்டாலின் நேற்று கவர்னரை நேரில் சந்தித்தார். இருவரும் சகஜமாக உரையாடினர்.
புதிய அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜுக்கு, பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் முதலில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். அதன்பின் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது மீண்டும் அமைச்சராக்கப்பட்டு, அவர் ஏற்கனவே கவனித்த, பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!