பெங்., மாநகராட்சி கமிஷனர் இடமாற்றம்

பெங்களூரு: எதிர்பார்த்ததை போன்று, பெங்களூரு மாநகராட்சி கமிஷனராக இருந்த துஷார் கிரிநாத், நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராக பணியாற்றும் உமா சங்கர், நாளை பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவரால் காலியாகும் இடத்துக்கு, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோன்று, துஷார் கிரிநாத்தை நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை கமிஷனராக நியமித்து, மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. இவரால் காலியான பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் பதவிக்கு, பெங்களூரு மெட்ரோ நிறுவன நிர்வாக இயக்குநர் மஹேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

துஷார் கிரிநாத், இரண்டரை ஆண்டுகளாக பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனராக பணியாற்றியவர். பெஸ்காம், பெங்களூரு குடிநீர் வாரியத்திலும் பணயாற்றியவர். இவர் நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலர் பொறுப்பை, திறம்பட நிர்வகிப்பார் என, அரசு கருதுகிறது.

Advertisement