கே.எம்.சி.எச்.,தலைவரின் சேவைக்கு கவுரவம்

கோவை:
கோவை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில், கொங்கு குடும்ப விழா மற்றும் கொங்கு சமுதாயத்தில் பல்வேறு துறைகளில், சிகரம் தொட்ட சாதனையாளர்களுக்கு, கொங்கு சாதனை விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

நவஇந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில், கே.எம்.சி.எச்., மருத்துவமனை மற்றும் டாக்டர் என்.ஜி.பி., கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமிக்கு, கொங்கு வாழ்நாள் சாதனையார் விருது வழங்கப்பட்டது. விருதினை, கே.பி.ஆர்., நிறுவனங்கள் மற்றும் கே.பி.ஆர்., கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி வழங்கி கவுரவித்தார்.

கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக, அரிய சேவையாற்றி வரும், அவரின் சேவையை பாராட்டி, இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவில், கே.எம்.சி.எச்., மருத்துவமனை மற்றும் டாக்டர் என்.ஜி.பி.,கல்வி நிறுவனத்தின் துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி, கோவை கொங்கு நண்பர்கள் சங்கத் தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.

Advertisement