அமைச்சரவை மாற்றத்தில் இந்த முறையும் கள்ளக்குறிச்சி மாவட்டம் புறக்கணிப்பு; தலைமை மீது தி.மு.க.,வினர் அதிருப்தி

அமைச்சரவை மாற்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தி.மு.க..,வினர் ஏமாற்றம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் நடந்த அமைச்சவை மாற்றத்தின் போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எப்படியும் ஒரு அமைச்சர் உறுதி என தி.மு.க.,வினர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அமைச்சர் பொன்முடி வகித்து வந்த வனத்துறை அமைச்சராக சங்கராபுரம் தொகுதியில் 6வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயசூரியன் எம்.எல்.ஏ., விற்கு கண்டிப்பாக இம் முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.
சமுக ஊடகங்களிலும் வசந்தம் கார்த்திகேயன் அல்லது உதயசூரியன் ஆகிய இரு பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகவும், இதில் 6 முறை எம்.எல்.ஏ.,வாக உள்ள உதயசூரியன் சீனியர் என்பதால் அவருக்கு தான் பொன்முடி வகித்து வந்த வனத்துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்தனர். ஆனால் அமைச்சரவை மாற்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் வகித்து வந்த இலாக்காக்கள் ஏற்கனவே உள்ள அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமான பின் இந்த மாவட்டத்திற்கு அமைச்சர் நியமிக்கப்படாமலேயே இருந்து வந்த நிலையில் இப்போது அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பொன்முடிக்கு பதிலாக ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்த தி.மு.க.,வினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மட்டும் இதுவரை அமைச்சர் இல்லாமல் பொறுப்பு அமைச்சர் என்ற நிலையிலேயே உள்ளது.
மாவட்டத்திற்கென அமைச்சர் ஒருவர் இருந்தால் மாவட்டம் வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பில் இருந்த கட்சியினர் தலைமை மீது அதிருப்தியடைந்துள்ளனர்.
மேலும்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை
-
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!