காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை

காங்கேயம்:காங்கேயம் அடுத்துள்ள ஓலப்பபாளையம், கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், 1100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சந்தை தொடங்கியுள்ளது,
கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா வருகிற மே5ம் தேதியும், 12ம் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோவில் சித்தரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது. பத்தாம் நுற்றாண்டில் (1088) அபிமான சோழ ராசாத்திராசனால் விக்கிரம சோழீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு, வீர ராசேந்திர சோழனால் இக்கோயிலுக்கு கொடை வழங்கப்பட்டும், உழவர்கள், வணிகர்களுக்கு வரி விதிக்கப்பட்டு விக்கிரம சோழீஸ்வரர் கோயில் தைப்பூச விழாவும், தினப்பூசைகளும், இதர திருவிழாவும் நடந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. மேலும் சேரர்களின் முசிறி துறைமுகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் இராசகேசரி பெருவழிப் பாதையில் அமைந்துள்ள இக்கோவிலும் ஆண்டு தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையும் 1100 ஆண்டுகள் பழமையானதாகும். கடந்த 27ம் தேதி இந்த சந்தை துவங்கியது. இந்த ஆண்டு மாடுகள் வரத்து அதிகமாகியுள்ளது. மேலும் புதுக்கோட்டை திருவாரூர் திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாடுகள் வாங்க வந்துள்ளனர்.
இந்த மாட்டுச் சந்தைக்கு வெள்ளகோவில், திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, பல்லடம், கோவை பகுதிகளிலிருந்து காங்கேயம் இன மாடுகள், காளைகள், கிடேரிக்கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. நாட்டு மாடுகளுக்கு என கடந்த 1100 ஆண்டுகளாக நடைபெறும் ஒரே சந்தை இதுவாகும். இங்கு 6 மாத இளங் கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடுகள் 50 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரையும், ஒரு சோடி காளைகள் 80 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரையும், பூச்சி காளையகள் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையும் விற்பனைக்கு வந்துள்ளன.
திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடுகள் வாங்க வருவோரும், கோவிலில் மொட்டைபோட்டு நேர்த்திக்கடன் செலுத்த வருவோரும், திரும்பிச் செல்லும்போது மறவாமல் சாட்டை வாங்கிச் செல்வது தொன்று தொட்டு நடந்து வருவதாக கடைக்காரர்கள் கூறினர்.
மேலும்
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்: ஜனாதிபதி ஒப்புதல்
-
போலீசாரின் நெடுங்கால கோரிக்கை: அனுமதி மறுக்கும் தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
-
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் ஜூன் 5 ல் நிறைவுபெறும்!
-
பாக்., ஆதரவு கோஷம் எழுப்பியவர் அடித்துக்கொலை: கர்நாடகாவில் 15 பேர் கைது
-
பாக்., பாதுகாப்பு அமைச்சரின் 'எக்ஸ்' கணக்கை முடக்கியது இந்தியா
-
பிரீமியர் லீக் போட்டி: கோல்கட்டா அணி பேட்டிங்