அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்

5

சென்னை: அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் தலா ரூ.1 இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


@1br2019ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் 11 பேர் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அதற்காக சென்னை தரமணியில் உள்ள கல்லுக்குட்டை என்ற இடத்தை பார்வையிட சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அறப்போர் இயக்கம் மீது வழக்கும் தொடரப்பட்டது.


இதைத் தொடர்ந்து, சென்னை தரமணி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தன்னார்வலர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.1 வழங்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மனித உரிமை மீறல் புகார் அளித்திருந்தார்.


இந்த வழக்கின் விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கவிதா என 2 பேரும் 11 தன்னார்வலர்களுக்கு மொத்தம் ரூ.22 வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவரத்தை அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement