குறைகேட்பு கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ.2.79 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். டி.ஆர்.ஓ ராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல மாவட்ட அலுவலர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் ராணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தங்கமணி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் தொகை, சான்றிதழ் கோருதல் உள்ளிட்ட 823 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கல் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரியம் சார்பில் உறுப்பினராக உள்ள 21 பணி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியத் தொகை ரூ.1,200 வீதம் மொத்தம் 2,79,300 ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
மேலும்
-
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை