வேலூர் மயானத்தில் உடலை எரிக்காமல் நாடகமாடிய ஊழியர்: உறவினர்கள் வாக்குவாதம்

3

வேலூர்: வேலூர் மின்மயானத்தில் உடலை எரிக்காமல் நாடகமாடியதாக குற்றம்சாட்டிய ஊழியருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மாநகராட்சி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.


வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மானங்குட்டையில் மயானம் உள்ளது. இங்கு உடல்களை புதைக்க தனி இடமும், எரிக்க தகன மேடையும் இருக்கிறது. எரிவாயு மூலம் உடல்களை எரிக்கும் அமைப்பு புதிதாக கட்டப்பட்டது. கடந்த 6 மாதங்களாக பயன்பாட்டில் இருக்கும் இதனை தனியார் நிறுவனம் ஒன்று பராமரித்து வருகிறது. ராஜேஷ் என்பவர் பிணங்களை எரிக்கும் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில், குமார் என்பவர், இறந்த தனது தங்கை உடலை எரிக்க உறவினர்களுடன் இங்கு வந்துள்ளார். பிணத்தை எரிப்பற்கான பணத்தை பெற்றுக் கொண்ட ராஜேஷ், உடலை தகன மேடையில் வைத்து உள்ளார். பிறகுஉறவினர்களை வெளியே போக கூறியுள்ளார். அவர்களும் வெளியே வந்தனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும், தகன மேடை புகைபோக்கியில் இருந்து புகை வரவில்லை. இதனால்,சந்தேகம் அடைந்த குமார் உள்ளே சென்று பார்த்த போது உடலை எரிக்காமல் பாதி எரிந்த நிலையில், தகன மேடையில் இருந்து வெளியே இழுத்துவைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த குமார் மற்றும் உறவினர்கள் ராஜேஷூடன் மோதலில் ஈடுபட்டு தாக்கினர்.

அந்த நேரம் பார்வதி என்ற மூதாட்டியின் உடல் அங்கே கொண்டு வரப்பட்டது. அங்கே நடந்த மோதலை பார்த்தவிட்டு, அவரது உறவினரே குழிதோண்டி உடலை அடக்கம் செய்துவிட்டு சென்றனர். தகவல் அறிந்த போலீசார் 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மாநகராட்சி அதிகாரி முருகன் அங்கு வந்து குமாரிடம் விசாரணை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து குமார் விறகு வாங்கிவந்து தனது தங்கை உடலை தகனம் செய்தார். அரசு பணத்தில் கட்டப்பட்ட தகன எரிவாயு மேடை பயனில்லை எனவும், எரிவாயு உள்ளிட்ட எதுவும் இல்லை. ஆனால், தனியார் நிறுவனம் கட்டணம் வசூலிப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Advertisement