பாக்., ஆதரவு கோஷம் எழுப்பியவர் அடித்துக்கொலை: கர்நாடகாவில் 15 பேர் கைது

6

மங்களூரு: கர்நாடகாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவின் மங்களூரு நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடுப்பு கிராமம் உள்ளது. இங்கு இரு தினங்களுக்கு முன் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் கோஷமிட்டார். அதனால் 25க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து, கோஷமிட்டவரை தாக்கினர். பலத்த காயமடைந்த அந்த நபர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.

சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

இந்த சம்பவம் கடந்த ஏப்.27 ஆம் தேதி பிற்பகல் பத்ரா கல்லுார்டி கோயில் அருகே நடந்தது. இறந்தவர் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, அவர் தடிகளால் தாக்கப்பட்டதால், அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன, இதனால் உள் ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

Advertisement