பாலக்காடு நகராட்சியில் மோதல்: காங்., மார்க்சிஸ்ட் மீது பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு

பாலக்காடு: பாலக்காடு நகராட்சியில் மோதலுக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் தான் காரணம் என்று பாலக்காடு நகராட்சி துணைத் தலைவரும் பா.ஜ., தலைவருமான கிருஷ்ணா தாஸ் கூறினார்.
பாலக்காடு நகராட்சியின் தலைவராக பா.ஜ.,வின் பிரமீளா சசிதரன் உள்ளார். துணை தலைவராக கிருஷ்ணா தாஸ் இருக்கிறார். இந்நிலையில் இன்று நகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, திறன் மேம்பாட்டு மையத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவரின் பெயரை நகராட்சியின் கீழ் பெயரிடும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று யு.டி.எப் எனப்படும் காங்கிரஸ் மற்றும் எல்.டி.எப் எனப்படும் மா.கம்யூனிஸ்ட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பா.ஜ., கவுன்சிலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலில் நகராட்சி தலைவர் தாக்கப்பட்டார். போராட்டம் வன்முறையாக மாறிவிட்டது.
இது குறித்து பா.ஜ., தலைவர் கிருஷ்ணா தாஸ் கூறியதாவது:
"பாலக்காடு நகராட்சி மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டு மையத்தைத் தொடங்க விரும்பியது, அந்த விழாவையும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டும் சீர்குலைத்தன. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது, நகராட்சி தலைவர், அவர்களை விவாதத்திற்கு அழைத்திருந்தார். ஆனால் அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க மறுத்தது மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டும் முழு நடவடிக்கைகளையும் சீர்குலைத்து, ஒரு சலசலப்பை ஏற்படுத்தினர். தலைவரை தாக்க முயன்றனர், பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். பாலக்காடு நகராட்சியில் முழுமையான குழப்பம் நிலவியது, அதற்கு யு.டி.எப்., மற்றும் எல்.டி.எப்., தான் காரணம்."
இவ்வாறு கிருஷ்ண தாஸ் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement