அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் ஜூன் 5 ல் நிறைவுபெறும்!

4

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் வரும் ஜூன் மாதம் 5ம் தேதியுடன் முழுமையாக நிறைவுபெறும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா அறிவித்துள்ளார்.

உ.பி. மாநிலம் அயோத்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலில் ஸ்ரீ ராம் லல்லாவின் 'பிரான் பிரதிஷ்டை' ஜனவரி 22, 2024 அன்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மிக மற்றும் மதப் பிரிவுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வந்து குழந்தை ராமரை தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் மீதம் இருந்த கட்டுமானப்பணிகள் வரும் ஜூன் மாதம் 5 ம் தேதியுடன் முழுமையாக நிறைவுபெறும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஜூன் 5ம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும். கட்டுமானப் பணிகளில் 99 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ளது. இன்று, கோயில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இது, ஷிகார் பணிகள் நிறைவடைந்துவிட்டன என்பதற்கான அடையாள அறிவிப்பாகும்.


ராமர் தர்பார் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. மே 23 சிலைகள் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த கருவறைகளில் வைக்கப்படும். அதைத் தொடர்ந்து, சில தொடர்புடைய மத விழாக்கள் நடைபெறும்.

கோவில் வளாகத்தில் உள்ள மகரிஷி வால்மீகி, வசிஷ்டர், அஹல்யா, நிஷாத்ராஜ் மகாராஜ், ஷப்ரி மாதா மற்றும் அகஸ்திய முனி ஆகியோரின் கோவில்களும் ஜூன் 5ம் தேதிக்குப் பிறகு பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்.
இவ்வாறு நிருபேந்திரா மிஸ்ரா கூறியுள்ளார்.

Advertisement