சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்: ஜனாதிபதி ஒப்புதல்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
@1brசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கன்னா, மே 13 அன்று ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து தனக்கு அடுத்ததாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதி பி.ஆர். கவாயின் பெயரை சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை நியமிப்பதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார். அவர் மே 14 அன்று பதவியேற்க உள்ளார். அரசியலமைப்பு அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில் கவாய் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கைியில் அமைச்சர் கூறியுள்ளார். தற்போது, சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதியாக இருக்கும் கவாய், மே 14 முதல் தலைமை நீதிபதியாக பணியை தொடர உள்ளார்.
இவர் , இந்தாண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளதால், சுமார் 6 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
வாசகர் கருத்து (1)
V Venkatachalam - Chennai,இந்தியா
29 ஏப்,2025 - 21:48 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement