பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்: மோடி உறுதி

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, எதிரிகள் மீது எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த இ லக்குகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகள், தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.
கடந்த ஏப்.22 ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாவுக்கு சென்ற பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து டில்லியில் பிரதமர் மோடி, தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதல், அதற்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பதிலடி தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவ தளபதிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு மரண அடி கொடுக்க வேண்டியது அவசியம். நமது முப்படைகளின் திறன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. எதிரிகள் மீது எந்த நேரத்தில் எந்தவகையில் எந்தஇலக்குகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதை படைகள் தாங்களே முடிவு செய்யலாம், என்றார்.











மேலும்
-
சம்பளம் தராத ஷோரூம் மேலாளரை பழிவாங்க காரை திருடி மறைத்து வைத்த ஊழியர் கைது
-
குடிநீர் தொட்டியில் குரங்குகள் குளித்து கும்மாளமிட்டு அட்டகாசம்
-
குழந்தை இல்லாததால் இளைஞர் தற்கொலை
-
பொங்கலுாரில் போலீஸ் ஸ்டேஷன் முதல்வர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
-
வழக்கறிஞர்கள் 2வது நாள் ஆர்பாட்டம்
-
இணைய வழியில் மட்டுமே வரி வசூல்! கிராம ஊராட்சிகளுக்கு 'செக்'