சுனாமி நினைவிடம் அமைக்கும் பணி துவக்கம்

புதுச்சேரி : வம்பாகீரப்பாளையத்தில் சுனாமி நினைவிடம் அமைப்பதற்கான பணி துவங்கியது.

உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம், பாண்டி மெரினா அருகே பொதுப்பணித்துறை மூலம் 24.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக, சுனாமி நினைவிடம் அமைக்கும் பணி துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.

இப்பணியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

தலைமை பொறியாளர் வீரசெல்வம், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப் பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement