சீனா தந்த ஆயுதங்களை பாருங்க! எல்லையில் பாக்., போர் முழக்கம்

3

பாகிஸ்தான் மக்கள் மற்றும் ராணுவத்தில் சிலர், இந்தியாவுடனான போரை வெறுக்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் ஆகியோரும் போரை விரும்பவில்லை. காரணம், கடந்த கால அனுபவங்கள் தான்.

ரத்த ஆறு ஓடும் என கொக்கரித்த பாக்., வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோவும் நேற்று, 'போர் தேவை இல்லை' என அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளார்.

ஆனால், பாக்., பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தங்களுக்கு சீனா, துருக்கி நாடுகள் உதவும் என்ற நம்பிக்கையில் போருக்கு ஆயத்தம் ஆகி வருகிறார். ராணுவ தளபதி அசிம் முனீரும் போரை ஆதரிக்கிறார்.

இந்தியா குறித்து அவதுாறுகளை அள்ளி விட்டு, நவாஸ் ஷெரீப் மனதை மாற்ற ஷாபாஸ் ஷெரீப் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா - பாக்., இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், எல்லையில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே உள்ளது. சிம்லா ஒப்பந்தம் ரத்து என பாகிஸ்தான் அறிவிப்பதற்கு முன்பே, இந்திய நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டு, தங்கள் கணக்கை துவங்கியுள்ளது பாகிஸ்தான். இந்திய ராணுவமும் பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும், ரேடார்களையும், சில தானியங்கி பீரங்கிகளையும் இந்திய எல்லையில், பாகிஸ்தான் குவித்து வருகிறது.

தங்கள் ஆயுத பலத்தை காட்ட பாக்., ராணுவத்தினர், அந்நாட்டு சாலைகளில் சீன கொள்முதல் ஆயுதங்களை அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

'பாகிஸ்தானின் இறையாண்மையை காக்கவும், அதன் எல்லையை பாதுகாக்கவும், தங்கள் நீண்ட கால நண்பன் பாகிஸ்தானுக்கு உதவுவோம்' என சீனா கூறியுள்ளது. துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி அளித்து வருகிறது. இதையல்லாம் நம்பி போருக்கு தயாராகிறது பாகிஸ்தான்.

Advertisement