காம்பிலி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

பொங்கலுார்,; பொங்கலுார் வேளராசி கள்ளிப்பாளையம் காம்பிலி அம்மன் கோவில், காம்பிலி நதிக்கரையில் அமைந்துள்ளது.
கோவிலில், புதிதாக ராஜகோபுரம், யாழி மண்டபம், விநாயகர் கோவில், திருமதில், வசந்த மண்டபம், வேள்வி மண்டபம், திருமண மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேக விழா, 27ம் தேதி துவங்கியது. வள்ளி கும்மியாட்டம் நாட்டிய நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது
தொடர்ந்து முளைப்பாலிகை ஊர்வலம், முதல், இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடந்தது. நேற்றிரவு நடந்த மூன்றாம் கால யாக வேள்வியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை நான்காம் கால யாகபூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு ராஜகோபுரம், விமானங்கள் கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு காம்பிலி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 'கும்பாபிஷேக விழாவுக்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இதற்காக, 30 ஏக்கர் பரப்பளவில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. காமநாயக்கன்பாளையம் போலீசார் புறக்காவல் நிலையம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
நாளை (இன்று) காலை, 10:00 மணி முதல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது,' என்றனர்.
மேலும்
-
நெடுஞ்சாலையோர பள்ளம் மூடல்
-
காம்பிலியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் திரண்டனர்
-
ராஜா ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை 'ஜோர்'
-
8 மணி நேர வேலை வழங்க கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
கோட்டக்குப்பம் நகர தி.மு.க., சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்
-
இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய 'பொலிரோ' ஜீப்