8 மணி நேர வேலை வழங்க கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி : எட்டு மணி நேர வேலை வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நிறைவேற்றினர்.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், பொள்ளாச்சி கோட்டம் சார்பில், தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் சாந்தி தலைமை வகித்தர். செயலாளர் சுருளிவேல், உதவி செயலாளர் சிவதாசன், அமைப்புச் செயலாளர் நாராயணசாமி ஆகியோர் விளக்கிப் பேசினர்.
ஐ.டி.சி.,யை கைவிட வேண்டும். எட்டு மணி நேர வேலை வேண்டும், ஓய்வூதியம் முழுமையாக விதிகளின்படி வழங்க வேண்டும், பணிக்கொடை குறைந்தபட்சம் எனும் விதியை மாற்றுதல் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முடிவில், பொருளாளர் முஸ்தபா, நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Advertisement
Advertisement