நெடுஞ்சாலையோர பள்ளம் மூடல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையோர ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பெஞ்சல் புயல், கனமழையால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம்-பண்ருட்டி இடையே, பல இடங்களில் சாலை சேதமடைந்தன. விழுப்புரம் வாணியம்பாளையம் பகுதியில் வெள்ளம் குறுக்கிட்டு சென்றதால், சாலையோர மண் அடித்துச் சென்றது.

சாலையோரம் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாததால் விபத்து ஏற்படும் ஆபத்தான நிலை ஏற்பட்டது. சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, தினமலரில் கடந்த வாரம் செய்தி வெளியானது.

இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், பள்ளம் ஏற்பட்ட பகுதியில் மண் கொட்டி நேற்று தற்காலிகமாக சீரமைத்தனர்.

Advertisement