காம்பிலியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் திரண்டனர்

பொங்கலுார் : பல்லடம் அடுத்த வே.கள்ளிப்பாளையம் காம்பிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
பல்லடம் வட்டம், வே.கள்ளிப்பாளையத்தில், வேளராசி குழாயர் குலதெய்வமான, காம்பிலி யம்மன் கோவில் அமைந்துள்ளது. புதிதாக ராஜ கோபுரம், யாழி மண்டபம் உட்பட பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பணிகள் நிறைவு பெற்றவுடன், கும்பாபிஷேக விழா கடந்த ஏப்., 27ல் துவங்கியது. பக்தர்கள் தீர்த்தக் குடம், முளைப்பாலிகை எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
அதன்பின், திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, பேரொளி வழிபாடு நடந்தது. 28ம் தேதி முதற்கால யாகபூஜையும், நேற்று முன்தினம், இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல், மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.
பக்தர்கள் புடைசூழ கும்பாபிேஷகம்
நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, காப்பணிவித்தல், நான்காம் கால யாக பூஜை, உள் விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, 9:30 மணிக்கு ராஜகோபுரம், விமானங்கள் கும்பாபிஷேகமும், 9:45 மணிக்கு அம்மன் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தை பேரூராதீனம், 25ம் பட்டம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளார், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார், வரன்பாளையம் ஆதீனம் மவுன சிவாச்சல அடிகளார் ஆகியோர் தலைமையில், சிவாச்சார்யார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிேஷக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம் மற்றும் மூலவ மூர்த்திகளை தரிசனம் செய்தனர்.
48 நாட்களுக்குமண்டல பூஜை
முன்னதாக, பக்தர்களுக்கு அன்னதானம், வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேள ராசி கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
கும்பாபிேஷகம் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது.
மேலும்
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு