ராஜா ஜூவல்லரியில் அட்சய திருதியை விற்பனை 'ஜோர்'

விருத்தாசலம்,: விருத்தாசலம் ராஜா ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை ஜோராக நடந்தது.

அட்சய திருதியையொட்டி, விருத்தாசலம் ராஜா ஜூவல்லரியில் நேற்று காலை 7:00 மணி முதல் சிறப்பு விற்பனை துவங்கியது.

இதில், கண்ணை கவரும் வகையில் இருந்த வெளிமாநில டிசைன்களான ராஜ்கோட், கேரளா, கொல்கட்டா மற்றும் வெயிட் லெஸ் டிசைன்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த தங்க நகை மற்றும், வெள்ளி, வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.

உரிமையாளர் குமார் அர்ச்சனா முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.

நேற்று காலை முதல் கோடை வெப்பம் சுட்டெரித்த நிலையில், குளு குளு ஏசியில் நின்று, வாடிக்கையாளர்கள் தங்கள் வாங்கும் நகைகளை சிரமமின்றி தேர்வு செய்தனர்.

Advertisement