நாணப்பரப்பு மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
கரூர்:
நாணப்பரப்பு மாரியம்மன் கோவிலில், நேற்று பூக்குழி திருவிழா நடந்தது.
கரூர் மாவட்டம், நாணப்பரப்பு மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 13ல் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, நாள்தோறும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் கம்பம் நடுதல், வடிசோறு நிகழ்ச்சி, தீர்த்தக்குடம் ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தன.
நேற்று மதியம், காவிரியாற்றில் புனித நீராடிய, 250க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஊர்வலமாக சென்று
மாரியம்மன் கோவில் முன், அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். பிறகு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.
பூக்குழி திருவிழாவையொட்டி, வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், நாளை மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா, மஞ்சள் நீராடல், மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.