இன்ஜி. கல்லுாரியில் ஆய்வகம்

திருப்புத்துார்; திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ1.1 கோடி மதிப்பில் ஏ.ஐ.சி.டி. ஐடியா ஆய்வகம் நிறுவப்படுகிறது.

புனேயில் நடந்த ஏ.ஐ.சி.டி., உயர்மட்ட செயல்திட்ட கூட்டத்தில் கல்லுாரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் ப.பாலமுருகன், முதன்மையர் ராபின்சன் பங்கேற்றனர்.

அதில் ரூ.1.1 கோடி மதிப்பிலான ஆய்வகம் அமைக்க அனுமதியானது. முதல்வர் பாலமுருகன் கூறுகையில், இந்த ஆய்வகம் மேம்பாடு, மதிப்பீடு, உருவாக்கம் மற்றும் பயன்பாடு என்ற நோக்கில் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான ஆய்வகத் திட்டமாகும்.

மாணவர்களுக்கு அவசியமான ஆராய்ச்சி சார்ந்த கற்றல் முறையை இந்த ஆய்வகம் நிறைவேற்றும்.

மாணவர்களின் படைப்புகள் ஆண்டு தோறும் நடக்கும் தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் போட்டியில் பங்கேற்று ரூ.1 லட்சம் அளவிலான பரிசுகளை பெறலாம், என்றார்.

Advertisement