தமிழ் கவிஞர் நாள் விழா 

சிவகங்கை; தமிழ் கவிஞர் நாளை முன்னிட்டு ஏப்., 29 ம் தேதி ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கொண்டாடப்படுகிறது.

ஒக்கூரில் உள்ள மாசாத்தியார் நினைவு துாண் மற்றும் மகிபாலன்பட்டி கணியன் பூங்குன்றனார் நினைவு துாணிற்கு மலர் துாவி கலெக்டர் ஆஷா அஜித் மரியாதை செய்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி வரவேற்றார்.

கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கேசவதாசன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ரமேஷ் கண்ணா, அருள்பிரகாசம் (கிராம ஊராட்சி), தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, ஐ.ஓ.பி., அலுவலர் (ஓய்வு) அனந்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒக்கூர் ஊராட்சி செயலர் ரேணுகா நன்றி கூறினார்.

Advertisement