ஸ்வீடனில் துப்பாக்கிச்சூடு; 3பேர் பலி

உப்சாலா: ஸ்வீடன் நாட்டின் உப்சாலா நகரில் நேற்று(ஏப்.,29) நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

உப்சாலா நகரின் வக்சலா சதுக்கத்தில் உள்ள சலூன்கடையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு சப்தத்தை கேட்டு போலீசாருக்கு அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்து வருகின்றனர். ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

Advertisement