பஸ் மோதி 12 தொழிலாளர் படுகாயம்

துாத்துக்குடி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, மேலஅழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த, 12 பெண்கள் உட்பட, 15 பேர் டாடா ஏஸ் வாகனத்தில், மதுரை --- துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், எத்திலப்பநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். வண்டியை காளிமகாராஜா, 26, ஓட்டினார்.

அப்போது, சென்னையில் இருந்து திசையன்விளை நோக்கி சென்ற ஆம்னி பஸ், தொழிலாளர்கள் சென்ற வாகனத்தின் பின்பக்கம் மோதியது.

இதில், வள்ளியம்மாள், 65, வேல்தாய், 41, உட்பட, 12 பெண்கள் பலத்த காயமடைந்தனர். எப்போதும்வென்றான் போலீசார், அவர்களை மீட்டு, துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் மணிகண்டன், 30, என்பவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement