ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., - நீட் தேர்வுகளில் தொடர் சாதனை; நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள், ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகளில் மாவட்ட அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.
இது குறித்து ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவ, மாணவியர் நீட் மற்றும் தேசிய அளவிலான பொறியியல் கல்லுாரியில் சேருவதற்கான ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிறந்து முறையில் அளித்து வருகிறோம்.
தேர்வுகளில் இங்கு பயிலும் மாணவ, மாணவியர் மாநில, மாவட்ட அளவில் ஆண்டுதோறும் சாதனை படைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது.
அதில், மாணவர் சித்தார்த் 98.68 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர்கள் எஸ்.அறிவொளி 96.76 சதவீதம், தினேஷ் 94.59, ராதாகிருஷ்ணன் 93.95, மாணவி லினிஷா 93.18, மாணவர்கள் சந்தோஷ் 92.78, எஸ்.வி., அறிவொளி 92.42, ரோகித்குமார் 92.38 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில், 18 பேர் 90 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜே.இ.இ., மெயின் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற, 12 பேர் ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் பிரித்விராஜ் சென்னையிலும், மாணவர் ஹேமநாத் ரூபன் ஹதராபாத்திலும் ஐ.ஐ.டி.,யில் சேர்க்கை பெற்றுள்ளனர். அதேபோல், மாணவர் அரவிந்த்குமார் திருச்சியிலும், மாணவர் பாலாஜி கோல்கட்டாவிலும், என்.ஐ.டி.,யில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
அதேபோல் ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி வகுப்பு மூலம் இதுவரை அரசு இட ஒதுக்கீட்டின் கீழ், 627 பேர் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ளனர். ஏ.கே.டி., பள்ளியில் பல்வேறு வகையான சிறப்பு அம்சங்களுடன் நேரடி நிர்வாகம் மூலம் தென்னியந்திய ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
நீட் பயிற்சி வகுப்புக்கான சேர்க்கைக்கு, 63691 46590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விடுதி வசதியும் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும்
-
தமிழகத்தில் இருந்து கடத்தல்; ரூ.9.6 கோடி கஞ்சாவை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு