லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை

மதுரை : மதுரை மாவட்டம் காசிபுரம் சரவணன். இவர் ஒப்பந்த பணி மேற்கொள்வதற்காக 2015 ல் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் சொத்து மதிப்பு சான்று கோரி விண்ணப்பித்தார். தாசில்தாராக பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் 65, லஞ்சம் கேட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சரவணன் புகார் செய்தார்.

அவரிடம் ரூ.5000 லஞ்சம் வாங்கியபோது பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4000 அபராதம் விதித்து நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.

Advertisement