கஞ்சா பறிமுதல்; தண்டனை

மதுரை; மதுரை மாவட்டம் கட்டதேவன்பட்டி மலைச்சாமி 34, ஈரோடு மாவட்டம் பெரியகாட்டுதோட்டம் சண்முகபிரபு 35. இவர்கள் ஒரு லாரியில் 332 கிலோ கஞ்சா கடத்தி மதுரை முத்துப்பட்டியில் வந்தபோது சுப்பிரமணியபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

இருவருக்கும் தலா 20 ஆண்டுகள், தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தர விட்டார்.

Advertisement