கிரிக்கெட் லீக்: பழநி யுவராஜ் அணி வெற்றி
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் பழநி யுவராஜ் அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன், பிரஸித்தி வித்யோதையா கோப்பைக்கான 2 வது டிவிஷன் ,மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 வது டிவிஷன் போட்டிகள் என்.பி.ஆர்., ஆர்.வி.எஸ், ரிச்மேன், பி.எஸ்.என்.ஏ., மைதானங்களில் நடந்தது.
திண்டுக்கல் ஸ்ரீவசந்தா ஸ்வீட்ஸ் சிசி அணி 34.4 ஓவர்களில் 139 க்கு ஆல்அவுட் ஆனது. ஜெயந்த் 5 விக்கெட். சேசிங் செய்த விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் சிசி அணி 28.5 ஓவர்களில் 139/4 எடுத்து வென்றது. ஜெயந்த் 42. காந்திகிராம பல்கலை அணி 36.3 ஓவர்களில் 147க்கு ஆல்அவுட் ஆனது. முத்து விவேகானந்தர் 48, சரத் ரிச்சர்ட் 4 விக்கெட். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் நைக் சிசி அணி 42.5 ஓவர்களில் 121க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. சசிகுமார் 3 விக்கெட். திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 50 ஓவர்களில் 259/9. வினோத்குமார் 53, விக்னேஷ் 45, ராஜபாண்டி 4 விக்கெட். சேசிங் செய்த ஏ.எம்., சிசி அணி 42.2 ஓவர்களில் 249 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. ராஜபாண்டி 110, காளீஸ்வரன் 45, ராம்திலக் 4, விக்னேஷ் 3 விக்கெட்.
காந்தி கிராம பல்கலை அணி 42.4 ஓவர்களில் 187க்கு ஆல்அவுட் ஆனது. முத்துவிவேகானந்தர் 39, உதயகுமார் 5, மதிசெல்வம் 3 விக்கெட். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., சிசி அணி 35.5 ஓவர்களில் 188/6 எடுத்து வென்றது. அருண்குமார் 49, அபிலாஷ் 34, உதயகுமார் 39(நாட்அவுட்).
பழநி யுவராஜ் சிசி அணி 24.2 ஓவர்களில் 210 க்கு ஆல்அவுட் ஆனது. கவியரசு 57, நிரஞ்சன் 55, முத்து 4 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் ஆதித் சிசி அணி 25 ஓவர்களில் 181/7 எடுத்து தோற்றது. முத்து 60, முகமதுஎத்ரிஸ் 39, ஜோசப்ஜான்பவுல் 33, பிரதீப் 3 விக்கெட். முதலில் பேட்டிங் செய்த பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 215/7. முத்துகாமாட்சி 82, விஷ்ணுகார்த்திக் 34. சேசிங் செய்த திண்டுக்கல் லெவன் ஸ்டார் சிசி 21 ஓவர்களில் 138 ஆல்அவுட் ஆகி தோற்றது. அருண்குமார் 45, ஹரிபாஸ்கர் 6 விக்கெட்.
மேலும்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு