கோடை காலத்தை பயன்படுத்தி நீர்நிலைகளை துார்வாரலாமே! மழையின் போது நீரை சேமிக்க வழி காணுங்க

மாவட்டம் முழுவதும் 5 ஆண்டுகளுக்கு முன்பான கணக்கெடுப்பின் படி பொதுப்பணித்துறை குளங்கள் 295, ஊராட்சி குளங்கள் 605, ஊராட்சி ஒன்றிய குளங்கள் 435, டவுன் பஞ்சாயத்து குளங் கள் 11, தனியார் குளங்கள் 11 என 1401 உள்ளன.ஆனால் பல்வேறு காரணங்களால் குளங்கள் துார்வாரப்படாமலும், முறையாக பராமரிக்காமல் சிதிலமடைந்து காணப் படுகின்றன. பல இடங்களில் கணக்கில்லாமல் கனிமவளங்கள் வேறு கொள்ளையடிக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி குளங்கள், கண்மாய்களுக்கு வரும் நீர் வழித்தடங்கள் முழுவதுமாக ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. குறிப்பாக குடகனாற்றை கருவேல மரங்கள் முழுமையாக ஆக்கிரமித்து புதர்மண்டி கிடக்கிறது. இந்த ஆறு உருவாகும் இடத்தில் இருந்தே கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. மேலும் பல ஆண்டுகளாக குடகனாற்றில் துார்வாரும் பணியும் மேற்கொள்ளப்பட வில்லை.இதனால் குடகனாற்றின் வழித்தடம் முழுவதும் புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலத்தில் குடகனாற்றில் தண்ணீர் வந்தாலும் கூட அது அழகாபுரி அணையை சென்றடையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
காமாட்சிபுரம் ஆவினக்குளம் கருவேலஞ்செடிகள் அதிகளவில் இருப்பதால் நீர் உறிஞ்சி அவை நன்றாக வளர்ந்துள்ளன. ஆனால் பயிர்களுக்கு வழியில்லை. கால்வாய்கள் சரிவர வெட்டாததால் தண்ணீர் எந்தப்பக்கம் செல்லும் என்றே கணிக்க முடியாத சூழலும் நிலவுகிறது. திண்டுக்கல் புறநகர் பகுதியை யொட்டியுள்ள சாமியார் குளம் முழுவதுமே குப்பையால் நிறைந்துள்ளது. செட்டிநாயக்கன்பட்டி மந்தைக்குளம் கழிவுநீரால் நிரம்பியிருக்கிறது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலன நீர்வழித்தடங்கள், குளங்கள், கண்மாய்கள் துார்வாரப்படாமலும் ஆக்கிரமிப்பிலும், சிக்கித்தவிக்கின்றன. ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் இது குறித்து விவசாயிகள் தெரிவித்த வண்ணமே இருக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை.
ரெட்டியார்சத்திரம் பெருமாள் கோயில் குளம், பாலகிருஷ்ணாபுரம் குளம், திண்டுக்கல் ஏ.வெள்ளோடு பெரியகுளம், நரசிங்கபுரம் குட்டையாகுளம், செல்லமந்தாடி சந்தனவர்த்தினி ஆறு உள்ளிட்டவை பராமரிப்பின்றி கிடக்கிறது. பழநி வையாபுரி குளம், தட்டான் குளம், சண்முக நதி போன்றவை அமலைச் செடிகளாலும், குப்பை கழிவுகளாலும் நிரம்பிக் கிடக்கிறது. ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் கேட்பாரற்று உள்ளன.
மேலும்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு