அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

திண்டுக்கல்; திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் கோயில் சித்திரைப் பெருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதை யொட்டி கோயில் கொடிகம்பம், கோயில் வளாகம் முழுவதும் மலர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காலை 6:00 மணிக்கு கணபதி , ரிஷப ஹோமம் யாக சாலை பூஜைகள் முடிய கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகம் நடந்தது.இதை தொடர்ந்து சிவவாத்தியங்கள் முழங்க கொடி கம்பத்தில் கொடியேற்ற சிறப்பு பூஜை நடந்தது. இதன் பின் ஞானாம்பிகை -காளகத்தீசுவரர், அபிராமி அம்மன்- ,பத்மகிரீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி, உறுப்பினர்கள் வீரக்குமார், சண்முகவேல், மலைச்சாமி, நிர்மலா, இணை ஆணையர் கார்த்திக், செயல் அலுவலர் தங்கலதா, தாடிக்கொம்பு கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, சீனிவாச பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மாரிமுத்து , திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் .

தினமும் பல்வேறு வாகனங்களில் அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் எழுந்தருள ரத வீதிகளில் உலா வருதல் நடக்கிறது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 8ல் திருக்கல்யாணம், மறு நாள் தேரோட்டம் நடக்கிறது.

Advertisement