விருது வழங்கும் விழா

திண்டுக்கல்; திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்வி குழுமம் சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடந்தது.கல்லுாரி இயக்குனர் மைதிலி வரவேற்றார்

தலைமை செயல்அதிகாரி வேணுகோபால் முருகதாஸ் விருந்தினர்களை கவுரவித்தார். ஆலோசகர் கற்பூர சுந்தரபாண்டியன், பாரிபேசினர்.

விருதுநகர் சிறப்பு வருவாய்த்துறை அதிகாரி மாரிமுத்து பேசினார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12 தலைமையாசிரியர்களுக்கும், தேசிய, மாநில அளவில் கல்வி, விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

கல்லுாரி முதல்வர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Advertisement