கற்கள் பரப்பி 6 மாதமாகியும் சாலைப்பணி துவங்கவில்லை

காரைக்குடி; காரைக்குடி அருகே கல்லுப்பட்டியில் புதிய சாலைக்காக கற்கள் பரப்பி 6 மாதமாகியும் புதிய சாலை அமைக்காததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா அருகே உள்ள கல்லுப்பட்டியிலிருந்து சடையன் காடு வரை 12 கி.மீ., தூரத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணி அக்டோபரில் துவங்கியது.ஜல்லிக்கற்கள் விரிக்கப்பட்டது. 6 மாதங்களைக் கடந்தும் இதுவரை பணி நடைபெறவில்லை.

தினமும், இப்பகுதியில் இருந்து விவசாயிகள், கிராம மக்கள் வியாபாரிகள் என ஏராளமானோர் காரைக்குடிக்கு வந்து செல்கின்றனர். கற்சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

Advertisement