மாநில சிலம்ப போட்டி

திருப்புத்துார்; மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருப்புத்துார் மாணவி வெண்கலப்பதக்கம் வென்றார்.

22வது மாநில சிலம்பப் போட்டி வேலுார் பள்ளிகொண்டாவில் நடந்தது. ஆண்,பெண் இருபிரிவுகளில் பல போட்டிகள் நடந்தன. அதில் சிவகங்கை மாவட்ட அணியில் திருப்புத்தூர் ருத்ரன் ஷா சிலம்பப்பள்ளி மாணவி ப்ரீத்தி 12 வயதிற்குட்பட்ட 30 கிலோ எடை பிரிவுக்கான சாண்டா சண்டைப் போட்டியில் பங்கேற்றார்.

அதில் மூன்றாமிடத்தை வென்றார். சிலம்ப ஆசான் நமச்சிவாயம், பயிற்சியாளர்கள் சொர்ணலதா, நமச்சிவாயம், சுந்தரமணி, சங்க செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பாராட்டினர்.

Advertisement