மணவெளியில் ரூ. 45.33 லட்சத்தில் நுாறு நாட்கள் பணி துவக்கம்

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் 45.33 லட்சம் ரூபாய் மதிப்பீல், நுாறு நாட்கள் பணிகளை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.

மணவெளி தொகுதியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஆண்டியார் பாளையத்தில் 29.52 லட்சம் மதிப்பில், உப்பனாறு கரையை வலுப்படுத்தும் பணி துவக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தவளக்குப்பம் இரட்டை குட்டை இணை வாய்க்காலை 4.58 லட்சத்தில் துார வாரும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.

பூரணாங்குப்பம் குளத்தை 6.97 லட்சத்தில் துார் வாருதல், அதே பகுதியில் உள்ள அலுத்து குட்டையை 4.26 லட்சத்தில் ஆழப்படுத்துல் ஆகிய பணிகளை சபாநாயகர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவிப்பொறியாளர் ராமன், இளநிலைப்பொறியாளர் சிவஞானம், பொதுச்செயலாளர் சக்திபாலன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், தனசுந்தரம்பாள் சரிடெபுள் சொசைட்டி தலைவர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement