சுற்றுலா பஸ் கவிழ்ந்து 19 பேர் பலத்த காயம்

மூணாறு; மூணாறு அருகே பைசன்வாலி கோமாளிகுடி பகுதியில் கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலா பஸ் கவிழ்ந்து 19 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலம் மங்களூரு கிளீன்சிட்டி பகுதியில் உள்ள தனியார் ஆங்கில மீடியம் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் என 30 பேர் கொண்ட குழு பஸ்சில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். பைசன்வாலி, கோமாளிகுடி பகுதியில் நேற்று மதியம் இறக்கத்தில் பஸ் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் சாந்தி 31, வேதராவ் 40, பார்வதி 45, நாகராஜ் 31, ஹர்ஷிதா 28, சுவாதி 37, வேதா 20, கஜலெட்சுமி 22, வித்யாஸ்ரீ 21, ராஜேஷ் 34, உள்பட 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement