ஜூன் 1 வரை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு, மே, 1 முதல் ஜூன், 1 வரை, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு, மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், முதல் வாரத்தில் மே.5, 6ம் தேதிகளில், மனுத்தாக்கல் செய்யலாம். அவை 7, 8ம் தேதிகளில் விசாரணைக்கு எடுக்கப்படும். மற்ற வாரங்களில், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரணைக்கு எடுக்கப்படும்.

விடுமுறை காலத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு அமர்வுகளில், தலா மூன்று நீதிபதிகள்; மதுரை கிளையில், நான்கு அமர்வுகளில், மொத்தம் 13 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பர்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement