காதல் தோல்வியால் மேலாளர் தற்கொலை

ராமேஸ்வரம்: காதல் தோல்வியால் ராமேஸ்வரத்தில் விடுதி மேலாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராமேஸ்வரம் சேராங்கோட்டையை சேர்ந்தவர் விஜய் 25. இவர் ராமேஸ்வரம் கோயில் மேலரத வீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிந்தார். உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்தார். சமீபத்தில் அப்பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடத்தினர்.

வேதனை அடைந்த விஜய், கடந்த இரண்டு நாட்களாக சோகமாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தங்கும் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement