மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி
கடலுார்; பைக்கில் சென்ற வாலிபர் மரத்தில் மோதி இறந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், விலாங்குளம் தென்கரையைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் மகன் ரோகித்,22; சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார். நேற்று காலை தனது தம்பி லோகேஷ்,20; என்பவருடன் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு கடலுார் வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பைக்கை லோகேஷ் ஓட்டினார். கடலுார் முதுநகர் அருகே சிதம்பரம் சாலையில் சென்ற போது, சாலையோர மரத்தில் பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரோகித் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரேணுகாதேவி கோவிலில் 101வது ஆண்டு கரக திருவிழா
-
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ஜூலையில் மெட்ரோ ரயில்
-
'ட்ரோன்' உற்பத்தி நிறுவன தரவு திருட்டு? எஸ்.ஐ.டி., அமைத்தது உயர் நீதிமன்றம்!
-
57 முறை டிரான்ஸ்பர் ஆன ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா இன்று பணி ஓய்வு
-
பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
Advertisement
Advertisement