குடிபோதையில் தாக்கிய 4 பேர் கைது

சிதம்பரம்; குடிபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம், ஞானஜோதி நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி மகன் விக்கி (எ) விக்னேஷ், 25; இவர், படித்துறை இறக்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த வ.உ.சி., தெரு பாபு மகன் சந்தோஷ்,20; அய்யப்பன் மகன் சூர்யா, 21; பாரதி நகர் அய்யப்பன் மகன் ஆகாஷ்,23; கொத்தங்குடி தெரு வனராஜ் மகன் விஷ்வா,18; ஆகிய 4 பேரும் குடிபோதையில் விக்னேஷிடம் தகராறு செய்து தாக்கினர்.

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து சந்தோஷ், ஆகாஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement